கோப்புப்படம் 
இந்தியா

பழிக்குப் பழியாக 31 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சம்பவம்

புஷ்கர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, 1992ஆம் ஆண்டு நடந்த அஜ்மீர் மிரட்டல் சம்பவம் நினைவுக்கு வந்துள்ளது.

DIN


அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, 1992ஆம் ஆண்டு நடந்த அஜ்மீர் மிரட்டல் சம்பவம் நினைவுக்கு வந்துள்ளது.

முன்னாள் வார்டு கவுன்சிலர் சாவாய் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் 1992ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மதன் சிங்கின் மகன்கள் என்று தெரிய வந்துள்ளது.

மதன் சிங் வார செய்தித்தாள் நடத்தி வந்தார். அதில், அஜ்மீரில் பல பெண்கள் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதாக எழுதியிருந்தார். இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுதலையும் செய்யப்பட்டனர். அதிலிருந்தே அவரது இரண்டு மகன்களும், குற்றவாளிகளை பழிவாங்க திட்டமிட்டு வந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் செய்த இரண்டாவது பழிவாங்கும் திட்டம் இதுவாகும்.

மதன் சிங் கொலை செய்யப்பட்ட போது மகன்களுக்கு 8 - 12 வயதிருக்கும். சவாய் சிங் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மதன் சிங் எழுதிய செய்தியில், பல பள்ளி மற்றும் கல்லூரி பெண்களின் புகைப்படத்தைக் காட்டி அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில்தான், சவாய் சிங் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற மகன்கள் இருவரும், நாட்டுத் துப்பாக்கியால் அவர்களைச் சுட முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT