முகப்பு
இந்தியா

தில்லிப் பெண் அஞ்சலி வீட்டில் திருட்டு: பின்னணியில் தோழி நிதியா?

தில்லியில் டிசம்பர் 31ஆம் தேதி காரில் இழுத்துச்செல்லப்பட்டு பலியான அஞ்சலி சிங்கின் வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2023 at 4:39 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் டிசம்பர் 31ஆம் தேதி காரில் இழுத்துச்செல்லப்பட்டு பலியான அஞ்சலி சிங்கின் வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த திருட்டுச் சம்பவத்தில், அஞ்சலி சிங்கின் தோழி நிதி இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கரன் விஹார் பகுதியில் உள்ள அஞ்சலி சிங்கின் வீட்டுப் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதாகவும், எல்சிடி டிவி உள்ளிட்ட பல பொருள்கள் திருட்டுப்போனதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த திருட்டுச் சம்பவத்தின் பின்னணியில், அவரது தோழி நிதிதான் இருப்பார் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

வீட்டில் திருட்டுப் போன சமயத்தில் காவலர்கள் பாதுகாப்பில் இல்லாமல் இருந்ததும், குறைந்தது அஞ்சலி சிங் வீட்டில் 8 நாள்களாவது காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதலில் நிதி ஒளிந்துகொண்டிருந்தார். ஆனால் அஞ்சலி சிங்கின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு தைரியமாக வெளியே சுற்றுகிறார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.