இந்தியா

கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி: பெருமையுடன் பகிர்ந்த பேரன்

DIN


கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி பற்றி பேரன் பெருமையுடன் பகிர்ந்த டிவிட்டர் பதிவு பலராலும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது.

தனது பேரன்களுடன் சேர்ந்து 83 வயது பாட்டி கேரம் போர்டு விளையாடும் விடியோவுடன் அந்த பதிவு வெளியாகியிருக்கிறது. அக்ஷன் மாராத்தே என்பவர் பகிர்ந்திருக்கும் அந்த டிவிட்டர் பகுதிவில், 83 வயதாகும் எனது பாட்டி, புனேவில் நடந்த கேரம் போர்டு போட்டியில் இவரை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக நடுக்கமில்லாத கைகளைக் கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனி நபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவி இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT