இந்தியா

ஆண்டுக்கு 2.5 அங்குலம் புதையும் ஜோஷிமட், சுற்றுப்புறப் பகுதிகள்! ஆய்வு

ஜோஷிமட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆண்டுக்கு 2.5 அங்குலம் புதையுண்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

DIN

ஜோஷிமட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆண்டுக்கு 2.5 அங்குலம் புதையுண்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு டேராடூனைச் சேர்ந்த கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

உத்தரகண்டில் உள்ள ஜோஷிமட் நகரப் பகுதிகள் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுவருகிறது. அங்கு மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 678-ஆக உயா்ந்துள்ளது. அங்கிருந்து இதுவரை 82 குடும்பங்கள் நகரின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று ஜோஷிமட்டிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியும் விரிசல் விட ஆரமித்துள்ளது. 

2020 ஜூலை முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்யும்போது ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே மெல்ல மெல்ல புதைந்து வருவது தெரியவந்துள்ளது. 

அதாவது ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆண்டுதோறும் 6.5 செ.மீ. அல்லது 2.5 அங்குலம் புதைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

இருமல் மருந்து விவகாரம்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? உலக சுகாதார அமைப்பு கேள்வி

SCROLL FOR NEXT