கோப்புப்படம் 
இந்தியா

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று  பஞ்சாபில் தொடங்குகிறது!

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று  பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கவுள்ளது.

DIN

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கவுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா  உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் இன்று நுழைய உள்ளது.

புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய நடைப்பயணம் பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.

ஜம்மு-காஷ்மீரில் ஜன.20-இல் நுழையும் நடைப்பயணத்தை ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி தேசிய கொடியேற்றி ராகுல் காந்தி நிறைவு செய்கிறாா்.

இந்த நடைப்பயணம், தென் மாநிலங்கள், பஞ்சாப், ஹரியாணா, ம.பி., ஹிமாசல், உ.பி. உள்ளிட்ட மாநிலங்கள் வழியே நடைபெற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைகிறது.

பஞ்சாபில் இன்று தொடங்கும் நிலையில், இன்னும் ஜம்மு காஷ்மீரில் மட்டும் நடைப்பயணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT