பஞ்சாபில் 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை (முக்கிய கேள்விகள் அடங்கிய தொகுப்பு) வாங்கிக்கொள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அம்மாநில அரசு ரூ. 72 முதல் 90 வரை வழங்குகிறது.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் மொத்தம் ரூ.3.5 கோடி ரூபாயை பஞ்சாப் அரசு ஒதுக்கியுள்ளது.
பஞ்சாபில் மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்வு எழுதவுள்ள மாணவர்களை கோனார் உரைகளை வாங்கிப் படிக்க வைக்கும் நோக்கத்தில் பஞ்சாப் அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, தேர்வுக்குத் தேவையானவற்றை நகல் எடுத்துக்கொள்ள 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மாநில அரசு ரூ.72 முதல் 90 ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 3.5 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து பேசிய மாவட்ட கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், மாணவர்கள் சிறப்பாக தேர்வெழுத வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சார்பில் மாணவர்களுக்கு இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.72, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.