பிரதமர் மோடியின் ஹைதராபாத் பயணம் ஒத்திவைப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் பயணம் ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் பயணம் ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையேயான வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைப்பதற்கும், மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் ஜதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தார்.
மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி புதன்கிழமையன்று பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒத்திவைப்பு பற்றிய தகவலை தெரிவித்தார்.
மோடி வருகையின் திருத்தப்பட்ட அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெலங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் தெரிவித்தார்.