இந்தியா

சால்ட் லேக் சந்தையில் பயங்கர தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்!

DIN

கொல்கத்தாவின் சால்ட் லேக் சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. 

சால்ட் லேக் சந்தையில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அதிகாலை நிகழ்ந்ததையடுத்து உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. பல லட்சம் ரூபாய் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இறுதியில்  தீயானது காலை 11 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதிகாலையில் வீசிய காற்று காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT