கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் ரயில், விமான சேவை பாதிப்பு!

கடும் பனி மூட்டம் காரணமாக நாட்டின் தலைநகரான தில்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

DIN

கடும் பனி மூட்டம் காரணமாக நாட்டின் தலைநகரான தில்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால், பல்வேறு நகரங்களிலிருந்து சுமார் 60 விமானங்கள் தில்லிக்கு தாமதமாக வந்திறங்கின. 

வடமாநிலங்களில் பனி மூட்டம் மற்றும் குளிர் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால், கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவிகிறது. 

காலை 8 மணி வரை அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. விளக்குகளை எரியவிட்டபடி சென்றாலும், ரயிகளை இயக்குவதில் சிரமம் நிலவுவதாக கூறப்படுகிறது. 

இதேபோன்று பனி மூட்டத்தால், தில்லி விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாக வந்திறங்கின. பல்வேறு நகரங்களிலிருந்து சுமார் 60 விமானங்கள் தில்லிக்கு தாமதமாக வந்திறங்கின. 

22 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் அவதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT