கோப்புப் படம். 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு

ஜம்மு-காஷ்மீரின் குரேஸி பகுதியில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. 

DIN

ஜம்மு-காஷ்மீரின் குரேஸி பகுதியில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. 

ஜம்மு-காஷ்மீர், பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸி பகுதியில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஜுர்னியால் கிராமத்தைத் தாக்கியதாகவும், ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

எனவே, குரேஸ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வானிலை சீராகும் வரை மலைப்பாங்கான பகுதிகள் அல்லது பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே குப்வாரா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சர்பால் பகுதியில் வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

SCROLL FOR NEXT