தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ சனிக்கிழமை சோதனை நடத்தியது.
தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது.
இந்நிலையில் சனிக்கிழமை மீண்டும் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று மீண்டும் சிபிஐ எனது அலுவலகத்திற்கு வந்துள்ளது. என் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை செய்தனர். எனது லாக்கரை சோதனையிட்டனர். எனது கிராமத்திலும் கூட விசாரணை செய்தனர். ஆனால் எனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எந்த தவறும் செய்யாததால் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. தில்லி குழந்தைகளின் கல்விக்காக நேர்மையாக உழைத்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.