இந்தியா

கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

DIN


திருவனந்தபுரம்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்க பதிவில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். உழவு செய்து அனைவரையும் வாழவைக்கும் உழவர்கள், செழிப்பையும் அளவற்ற மகிழ்ச்சியையும் பெறவேண்டும். இந்த நன்னாளில் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக பங்கேற்று கொண்டாடுகிறோம். பொங்கலோ பொங்கல்! என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

SCROLL FOR NEXT