தில்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது!
தில்லியில் இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
தில்லியில் இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று தில்லி பாஜக அலுவலகத்தில் தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழாண்டு நடைபெறும் 10 மாநிலத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் கட்சி சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.