முகப்பு
இந்தியா

உக்ரைன் கட்டடம் மீது ஏவுகணைத் தாக்குதல்: பலி 35 ஆக உயர்வு!

உக்ரைனில் டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தை குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலி 35 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

உக்ரைனில் டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தை குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலி 35 ஆக அதிகரித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓராண்டை நெருங்கியுள்ளது. உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

சமீபமாக ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

Advertisement

கீவ் நகரின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இந்த கட்டடத் தாக்குதலில் பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments