முகப்பு
இந்தியா

திருவள்ளுவர் தினம்: பிரதமர் மோடி அஞ்சலி!

திருவள்ளுவர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
பகிர்:


திருவள்ளுவர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரை பதிவில், 

ஞானி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரது உன்னத எண்ணங்களை நினைவு கூறுகிறேன் என்றார். 

இயற்கையில் பன்முகத்தன்மை கொண்ட அவை, அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றன.

திருக்குறளைப் படிக்க இளைஞர்களையும் வலியுறுத்துவேன் என்றார்.

திருக்குறள், "குறள்" என்றும் அழைக்கப்படுகிறது. இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நெறிமுறைகள் மற்றும் அறநெறி பற்றிய ஞானத்தை வழங்கும் ஒரு புகழ்பெற்ற தமிழ் உரையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.