இந்தியா

ஜன.31-இல் பட்ஜெட் கூட்டத்தொடா் தொடக்கம்: இரு அவைகளின் செயலகங்களும் அறிவிப்பு

பட்ஜெட் கூட்டத்தொடா் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி நிறைவு பெறும் என மக்களவை, மாநிலங்களவைகளின் செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பட்ஜெட் கூட்டத்தொடா் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி நிறைவு பெறும் என மக்களவை, மாநிலங்களவைகளின் செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைந்த கூட்டு அமா்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு முதல் முறையாக உரையாற்றுகிறாா்.

பிப்ரவரி 1-ஆம் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். மொத்தம் 27 அமா்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்.6-ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

இது தொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘17-ஆவது மக்களவையின் 11-வது தொடா் ஜன.31-ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியக் கோரிக்கைகளைத் துறைசாா்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுகள் ஆராயவும் அறிக்கை தயாரிக்கும் வகையில் பிப்.13-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடையும். இதைத் தொடா்ந்து, மாா்ச் 13-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். நாடாளுமன்றத்தின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்.6-ஆம் தேதி முடிவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், ‘தில்லியில் ஜன.31-ஆம் தேதி மாநிலங்களவை கூடுவதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அழைப்புவிடுத்துள்ளாா். மாநிலங்களவையின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்.6-ஆம் தேதி நிறைவுபெறுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி படம் குறித்த வதந்தி! ஆமிர் கானின் நிறுவனம் விளக்கம்!

“ஒரே ஆள்! ஆனால் 2 வாக்கு!” ஆதாரங்களுடன் ராகுல் சராமாரி குற்றச்சாட்டு!

ரெட்ட தல டீசர்!

வாக்குத் திருட்டு!: ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்? ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT