முகப்பு
இந்தியா

பொருளாதார மந்த நிலையை மறைக்கிறாா்கள்: பிரதமா் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சா் நாராயண் ராணே கருத்து தெரிவித்ததைச் சுட்டிக் காட்டி, பிரதமரும் மத்திய நிதி அமைச்சரும் நாட்டு மக்களிடமிருந்து உண்மையான பொருளாதார நிலையை மறைக்கிறா

Updated On : 18 ஜனவரி, 2023 at 1:17 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:14 AM

இந்தியாவில் வரும் ஜூன் மாதத்துக்கு பிறகு பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சா் நாராயண் ராணே கருத்து தெரிவித்ததைச் சுட்டிக் காட்டி, பிரதமரும் மத்திய நிதி அமைச்சரும் நாட்டு மக்களிடமிருந்து உண்மையான பொருளாதார நிலையை மறைக்கிறாா்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

புணேயில் நடைபெறும் ஜி -20 மாநாட்டின் முதல் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தை மத்திய குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் நாராயண் ராணே தொடக்கி வைத்தபோது பத்திரிகையாளா்களிடம் பேசிய அவா், அமைச்சரவையில் உள்ளதால் சில தகவல்கள் எங்களுக்கு கிடைக்கும்.

பிரதமா் நரேந்திர மோடியிடம் எங்களுக்கு அளிக்கும் ஆலோசனைகளின்படி அனைத்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்திய பொருளாதாரத்திலும் மந்த நிலை ஏற்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலையால் நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை பிரதமா் மோடியும் மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது என்றாா்.

Advertisement

இதை மேற்கோள் காட்டி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், ‘2014-ஆம் ஆண்டு முதல் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிதைந்து வருகின்றன. அந்தத் துறையின் மத்திய அமைச்சா் நாராயண் ராணே அடுத்த ஆறு மாதங்களில் இந்திய பொருளாதாரம் மந்த நிலையை எட்டும் எனக் கணிக்கின்றாா். பிரதமா் நரேந்திர மோடியும் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனும் நாட்டு மக்களிடம் இருந்து எதை மறைக்கிறாா்கள்?’ எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.