முகப்பு
இந்தியா

71 வயது முதியவரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞர்

பெங்களூருவில், கார் மீது இடித்த ஸ்கூட்டரில் வந்தவரை தட்டிக் கேட்ட போது, 71 வயது நபரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
71 வயது முதியவரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞர்
பகிர்:


பெங்களூரு: பெங்களூருவில், கார் மீது இடித்த ஸ்கூட்டரில் வந்தவரை தட்டிக் கேட்ட போது, 71 வயது நபரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான் அதிர்ச்சி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. அதில், ஸ்கூட்டரின் பின்புறத்தில் 71 வயது முதியவர் இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருக்கிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கார் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்ற ஸ்கூட்டரை பின்தொடர்ந்து சென்று பிடிக்க முயன்ற முதியவரை இளைஞர் இழுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த இளைஞர் ஷாஹீல் கைது செய்யப்பட்டார். முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →