முகப்பு
இந்தியா

தில்லியில் 2-வது நாளாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம்! பிரதமர் மோடி பங்கேற்பு

தில்லியில் இரண்டாவது நாளாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
பகிர்:

தில்லியில் இரண்டாவது நாளாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள், தேசிய செயற்குழு கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தில்லி பாஜக அலுவலகத்தில் தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்றும் கூட்டம் தொடர்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துகொண்ட நிலையில் இன்றும் கலந்துகொண்டுள்ளார். 

நிகழாண்டு நடைபெறும் மாநிலத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சி சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →