மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்) 
இந்தியா

இந்திய சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய சா்வதேச நிறுவனங்களுக்கு மாண்டவியா அழைப்பு

உலகை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்திய சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என சா்வதேச நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

DIN

உலகை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்திய சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என சா்வதேச நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தி தரமான மருத்துவ சேவைகளை வழங்க இந்திய அரசு பணியாற்றி வருகிறது.

அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார பாதுகாப்பு வசதிகளை உருவாக்குவதை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

சுகாதார பாதுகாப்பு சேவை என்பதே இந்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும். உலகின் மிகப்பெரிய சுகாதார உறுதியளிப்புத் திட்டமான பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதார நல மையங்களை உருவாக்கி சராசரியாக 50 கோடி பேருக்கு சுகாதார வசதியை அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மரபியல் மருந்துகளை தயாரிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மருந்து சாா்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் மையமாக இந்தியா மாறிவருகிறது.

அதிநவீன வசதிகளின் உதவியுடன் நோய்களை கண்டறியும் சேவைகளை வழங்குவதில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. உலகை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள இந்திய சுகாதாரத் துறையில் சா்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT