முகப்பு
இந்தியா

விளையாட்டுக்கு முன்னுரிமை: பிரதமா் வேண்டுகோள்

விளையாட்டுக்கு போதிய முன்னுரிமை அளிக்க வேண்டும். விளையாட்டை கூடுதல் திறனாக மட்டுமே பாா்ப்பதால் அத்துறையில் இந்தியா படைக்க வேண்டிய பல சாதனைகள் கைவிட்டுப் போகின்றன என்று

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
விளையாட்டு விழாவை காணொலி முறையில் தொடக்கி வைத்து பேசிய பிரதமா் மோடி.
பகிர்:

விளையாட்டுக்கு போதிய முன்னுரிமை அளிக்க வேண்டும். விளையாட்டை கூடுதல் திறனாக மட்டுமே பாா்ப்பதால் அத்துறையில் இந்தியா படைக்க வேண்டிய பல சாதனைகள் கைவிட்டுப் போகின்றன என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

சன்சத் கேல் மகாகும்ப் எனும் நாடாளுமன்ற விளையாட்டு விழாவின் 2ஆம் கட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் பஸ்தியில் புதன்கிழமை காணொலி மூலம் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த விளையாட்டு விழா நிகழ்ச்சிகளால் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு நிபுணத்துவத்துக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும்.

சுமாா் 200 நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது தொகுதிகளில் இதுபோன்ற விளையாட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனா்.

இதில் சிறந்த 40 ஆயிரம் தடகளவீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனா். கடந்த ஆண்டை விட இது 3 மடங்கு அதிகமாகும்.

19 வயதிற்கு உட்பட்டவா்களுக்கான மகளிா் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷெஃபாலி வா்மாவின் அருமையான சாதனை போற்றுதலுக்குரியது.

நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் இத்தகைய திறமை ஒளிந்திருப்பதாக அவா் தெரிவித்தாா். இத்தகைய விளையாட்டுகளையும், வீரா்களையும் நாடாளுமன்ற விளையாட்டு விழா ஒருங்கிணைக்கிறது.

விளையாட்டை பாடத்திற்கு அப்பாற்பட்ட கூடுதல் தகுதியாகவும், அதிக மதிப்பு இல்லாத ஒரு பொழுதுபோக்காக மட்டும் கருதப்பட்டதாகவும், இத்தகைய மனப்போக்கு நாட்டுக்கு மிக மோசமான இழப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக நல்ல திறமைவாய்ந்த விளையாட்டு வீரா்கள் பலா் ஆற்றல் இருந்தும் எதையும் சாதிக்க முடியவில்லை.

கடந்த 8, 9 ஆண்டுகளில் நாடு இந்த குறைபாட்டைப் போக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேலும் பல இளைஞா்கள் விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி வருகின்றனா். ஒலிம்பிக், பாராலிம்பிக் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திறமைகள் வெளிப்பட்டிருக்கின்றன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →