இந்தியா

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது: மத்திய அரசு

DIN


பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு, மாநகராட்சி அல்லது நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் உள்ள வாகனங்கள் இனி இயக்க முடியாது. 

மேற்கண்ட அலுவலகங்களில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும், மேலும், அவற்றிற்குரிய பதிவுகளும் புதுப்பிக்கப்படாது என மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய விதி 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT