இந்தியா

மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

தில்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக, அதிகாலை ரோந்து சென்ற மகளிர் ஆணைய தலைவியை 10-15 மீட்டர் தூரம் காரில் இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN


புதுதில்லி: தில்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக, அதிகாலை ரோந்து சென்ற மகளிர் ஆணைய தலைவியை 10-15 மீட்டர் தூரம் காரில் இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக, அதிகாலை ரோந்து சென்ற மகளிர் ஆணைய தலைவி  ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை, எய்ம்ஸ் மருத்துவமனை கேட் எண் 2க்கு வெளியே சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது குழுவினருடன் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது மதுபோதையில் இருந்த ஹரீஷை பிடிக்க முயன்றபோது அவர் விரைவாக கார் ஜன்னலை மூடினார். அப்போது கை ஜன்னலில் சிக்கிக் கொண்டது. பின்னர் அதனுடனேயே தன்னை 15 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றதாகவும், கடவுள் என் உயிரைக் காப்பாற்றியதாக  தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்வாதி மாலிவால் பதிவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து வாகனம் கண்காணிக்கப்பட்டது.  

இந்நிலையில், தில்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை அளித்த தெற்கு தில்லியின் சங்கம் விஹாரைச் சேர்ந்த ஹரீஷ் சந்திரா(47) கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தில்லி காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT