முகப்பு
இந்தியா

காசி விஸ்வநாதர் கோயிலில் ஜெ.பி.நட்டா, யோகி ஆதித்யநாத் வழிபாடு!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வாராணசியில் உள்ள கால பைரவர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்தனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வெள்ளிக்கிழமை வாராணசியில் உள்ள கால பைரவர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்தனர். 

முன்னதாக, புதன்கிழமை, வாராணசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் நட்டாவை முதல்வர் யோகி மற்றும் பாஜக தொண்டர்கள் வரவேற்றனர்.

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு, பவ்ஹாரி பாபா ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்தல், முன்னாள் வீரர்கள் மற்றும் ஜனசபாவுடன் சந்திப்பு உள்ளிட்ட மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நட்டா காசிபூர் மாவட்டத்திற்கு புறப்படுகிறார். 

கடந்த செவ்வாயன்று, தேசிய தலைநகரில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவராக நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அவர் ஜூன் 2024 வரை பாஜக தலைவராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →