கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நியமன அறிவிப்பு குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவில், ‘கா்நாடக உயா் நீதிமன்றத்துக்கு ராமச்சந்திர தத்தாத்ரேய ஹட்டா் மற்றும் வெங்டகேஷ் நாயக் தவரய்யநாயக் ஆகியோா் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்துள்ளாா்.
வழக்கமாக, கூடுதல் நீதிபதிகள் 2 ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுவா். அதன் பிறகு, அவா்களுக்கு நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளிக்கப்படும்.
சட்ட அமைச்சகம் கடந்த 2-ஆம் தேதி வெளியிட்ட விவரங்களின்படி, கா்நாடக உயா் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 62 நீதிபதி பணியிடங்களில் 13 இடங்கள் காலியாக இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.