சத்தீஸ்கரில் மரத்தில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சனிக்கிழமை இரவு ரத்தன்பூர் மற்றும் பென்ட்ரா சாலைக்கு இடையே உள்ள கைரா-போடி கிராமத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. காருக்குள் இருந்தவர்கள் காரில் வெளியே வரமுடியாமல் உடல் கருகி இறந்தனர்.
காருக்குள் இறந்தவர்களின் உடல்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடுகளாக காணப்பட்டதால் இறந்தவர்களை இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
விபத்துக்குள்ளான கார் பிலாஸ்பூரில் உள்ள டோர்வா பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் கான் என்பவருக்கு சொந்தமானது தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ரத்தன்பூர்-கோட்டா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஆஷிஷ் அரோரா கூறினார்.