ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேரிட்ட சாலை விபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) பணியாற்றும் 5 ஊழியர்கள் பலியாகினர்.
ஆலப்புழா மாவட்டத்தில், இஸ்ரோ ஊழியர்கள் ஐந்து பேர் சென்ற கார் எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேரும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
24 வயது முதல் 30 வயது வரையிலான ஐந்து ஊழியர்களும் சென்ற வாகனம், மிக பயங்கரமாக டிரக்குடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியானதாகவும், ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆலப்புழா மேம்பாலம் பகுதியில் நடந்த இந்த விபத்தில், இஸ்ரோ ஊழியர்கள் சென்ற கார் அப்பளம்போல நொருங்கியதாகவும், உள்ளூர் மக்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் உதவியோடு காரின் பாகங்களை உடைத்து எடுத்து, அதில் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒரு இளைஞரின் சொந்த ஊர் ஆலப்புழா என்றும், இங்கு நடைபெறும் கோயில் விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் வந்த போது இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இஸ்ரோவின் உணவகத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.