முகப்பு
இந்தியா

ஜம்மு ரகுநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு நகருக்குள் நுழைந்த உடன், ரகுநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:47 PM
பகிர்:

ஜம்மு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு நகருக்குள் நுழைந்த உடன், ரகுநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

கட்சியின் மூத்த தலைவர்களுடன் வந்த ராகுல் காந்திக்கு கோயிலிலுள்ள பூசாரிகள் மாலை அணிவித்து அவரை கெளரவித்தனர்.

முன்னதாக, ராகுல் காந்தியின் யாத்திரை மதியம் அருகிலுள்ள சம்பா மாவட்டத்தில் இருந்து ஜம்முவிற்குள் நுழைந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரின் பாதுகாப்பு வளையம் மேலும் பலப்படுத்தப்பட்டது.

வெள்ளை சட்டை அணிந்து சென்ற ராகுல் காந்தியை, சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் காத்திருந்து வரவேற்றனர்.

சத்வாரி சவுக்கில் உரையாற்றிய ராகுல், இன்று சித்ரா பகுதியில் இரவு தங்குகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →