இந்தியா

பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மண் காலமானார்

பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மண் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.

DIN

பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மண் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.

74 வயதான லக்ஷ்மண்க்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், ஈசிஜி பரிசோதனைக்கு பின் அவர் வீடு திரும்பினார். 

ஆனால் வீடு திரும்பிய அவர் திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். லக்ஷ்மண் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மண், 200க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். 

மேலும் மறைந்த டாக்டர் ராஜ்குமார், மறைந்த அம்பரீஷ், மறைந்த விஷ்ணுவர்தன் உட்பட கன்னட திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் லக்ஷ்மண் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT