அரசு வேலைக்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி 
இந்தியா

அரசு வேலைக்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி

ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

PTI


பிகானீர்: ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கால்வாயில் வீசப்பட்ட ஐந்து மாதக் குழந்தை மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அதன் பெற்றோரை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை ஜான்வர்லால். அரசுப் பள்ளியில் உதவியாளராக ஒப்பந்த முறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்தப் பணிக்காக கடந்த டிசம்பர் மாதம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் அவர் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மூன்றாவதாகப் பிறந்த குழந்தை பற்றி இவர்கள் அதில் தெரிவிக்கவில்லை. இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அரசு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தையை அவர்கள் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், பிகானீர் மாவட்டம் சட்டர்கர் பகுதியில், ஒரு ஆணும், பெண்ணும், கால்வாயில் குழந்தையை வீசியதாக நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றினர். பெற்றோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அரசுப் பணி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பெற்ற குழந்தையை கால்வாயில் வீசியதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

SCROLL FOR NEXT