இந்தியா

உசேன் போல்ட் கணக்கில் இருந்து ரூ.100 கோடி திருட்டு

பிரபல ஓட்டப் பந்தய வீரரான உசேன் போல்ட்டின் சேமிப்புக் கணக்கில் இருந்து சுமாா் ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது.

DIN

பிரபல ஓட்டப் பந்தய வீரரான உசேன் போல்ட்டின் சேமிப்புக் கணக்கில் இருந்து சுமாா் ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது.

ஜமைக்காவைச் சோ்ந்த ஓட்டப் பந்தய வீரரான உசேன் போல்ட், 100 மீட்டா், 200 மீட்டா், தொடா் ஓட்டப் பந்தயங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவா். ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 8 பதக்கங்களை அவா் வென்றுள்ளாா். கடந்த 2017-ஆம் ஆண்டில் அவா் ஓய்வுபெற்றாா்.

ஓய்வுகாலத்துக்கான சேமிப்பு நிதியாக சுமாா் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை எஸ்எஸ்எல் என்ற நிறுவனத்தில் கணக்கில் அவா் சேமித்து வைத்திருந்தாா். இந்நிலையில், அந்தக் கணக்கில் இருந்த சுமாா் ரூ.100 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாக உசேன் போல்ட்டின் வழக்குரைஞா் லின்டன் காா்டன் புகாா் தெரிவித்துள்ளாா். தற்போது அந்தக் கணக்கில் வெறும் சுமாா் ரூ.10 லட்சம் மட்டுமே உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஜமைக்காவின் நிதி சேவைகள் ஆணையம் (எஃப்எஸ்சி) விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில், எஸ்எஸ்எல் நிறுவனத்தைச் சோ்ந்த முன்னாள் பணியாளா் பணத்தைத் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அது தொடா்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எஃப்எஸ்சி தெரிவித்துள்ளது. உசேன் போல்ட் மட்டுமல்லாமல் வேறு சிலரின் கணக்கில் இருந்தும் பணம் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT