இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கொட்டும் மழையில் தொடங்கியது ஒற்றுமை நடைப்பயணம்

PTI

ராம்பன்: கொட்டும் மழைக்கு இடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கி பனிஹால் நகரம் நோக்கி செல்கிறது.

ராம்பன் - பனிஹால் இடையேயான 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஜம்மு - ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நடைப்பயணம் நடைபெறவிருக்கிறது. எந்த தட்பவெப்பநிலையிலும், நாட்டின் பிற பகுதிகளோடு ஜம்மு - காஷ்மீரை இணைக்கும் ஒரு சாலையாக இது அமைந்துள்ளது. 

கனமழை காரணமாக இந்தச் சாலைகளில் கற்கள் விழும் என்பதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

131வது நாளாக நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் தொடக்கத்தில் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்த ராகுல், கனமழை காரணமாக, கருப்பு நிற மழைக்கோட் அணிந்து கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT