இந்தியா

ஏப்ரல் 27ல் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு! 

DIN

பத்ரிநாத் கோயிலின் நடை ஏப்ரல் 27-ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் கமிட்டி தெரிவித்துள்ளது. 

பத்ரிநாத் கோயிலின் நடை திறப்பதற்கான தேதிகள் "பஞ்சாங் கத்னா" என்று அழைக்கப்படும் நாள்காட்டியைப் படித்து முடிவு செய்யப்பட்டதாகவும், காடு கடா கலச யாத்திரை ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கும் என்றும் பத்ரி-கேதார் குழு தெரிவித்துள்ளது. 

பராம்பரிய வழக்கத்தின்படி மரபுகளுடன் பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும் கேதார்நாத் ஆகியவற்றை உள்ளடக்கிய 'சார் தாம்' எனக் குறிப்பிடப்படும் நான்கு புராதன யாத்திரை தலங்களில் பத்ரிநாத் ஆலயமும் ஒன்றாகும். இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் நகரில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் (ஏப்ரல் இறுதியில் மற்றும் நவம்பர் தொடக்கத்தில்) திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT