எடப்பாடி பழனிசாமி 
இந்தியா

இடைக்கால பொதுச் செயலாளர்: உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு முறையீடு

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி மகேஷ்வரி தினேஷ் அமர்விடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்குரைஞர் அரிமா சுந்தரம் முறையீடு செய்தார். 

முறையீட்டுக் கோரிக்கையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது கோரிக்கையை தெரிவித்துவிட்டீர்களா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தகவல்களை பகிர்ந்து கொண்டடோம் என பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வரும் 30ஆம் தேதி அன்று முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அன்றைய தினம், இந்த முறையீடு தொடர்பாக விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT