ஜம்மு காஷ்மீரில் விரைவில் பேரவைத் தோ்தல் நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் திரும்ப விரைவில் பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் திரும்ப விரைவில் பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீா் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ’ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் திரும்ப பேரவைத் தோ்தல் நடத்த முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
அடுத்ததாக ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இங்கு நிலம் மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்னை உள்ளது. அதற்கு சட்ட ரீதியாக தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இதுவரை 75 மாவட்டங்களைக் கடந்துள்ளது. தினசரி 23 முதல் 24 கி.மீ. தூரம் சராசரியாக ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா் என்றாா்.