இந்தியா

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் விமானப் படை விமானங்கள் விபத்து

PTI


மத்தியப் பிரதேசத்தில் விமானப் படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாவும், ராஜஸ்தான் மாநிலத்தில் விமானப்படையின் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் பயிற்சியின்போது, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்திலும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பனிமூட்டம் காரணமாக, இந்த விபத்துகள் நேரிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படைத்தளத்தில் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட  சுகோய் - 30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொரானா என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய  விமானப்படையைச் சேர்ந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதலில் தகவல்கள் வெளியாகின.  ராஜஸ்தான் மாநிலம் உச்செயின் என்ற பகுதியில் திறந்தவெளியில் விமானம் ஒன்று விழுந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. அங்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 

இந்த செய்தி உறுதி செய்யப்படுவதற்குள், மத்தியப்பிரதேசத்தில் இரண்டு விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் பரவின. அடுத்தடுத்து மூன்று விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT