இந்தியா

ஆங்கிலேயர் அட்டூழியங்களை ஆவணப்படங்களாக எடுக்காதது ஏன்? கேரள ஆளுநர் கேள்வி

DIN


திருவனந்தபுரம்: பிபிசி ஆவணப்பட தயாரிப்பாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த ஆட்டூழியங்களை ஆவணப்படங்களாக எடுக்காதது ஏன்? என பிபிசி தொடர் சர்ச்சைக்கு மத்தியில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கேள்வி எழுப்பியுள்ளார். 

2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டுள்ளது. இதுவரை 2 பாகங்களை வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கும் அனுமதி மறுத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை பலத்த அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படங்களை வெளியிட பிபிசி ஆவணப்பட தயாரிப்பாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த ஆட்டூழியங்களை ஆவணப்படங்களாக எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், "உலகம் முழுவதும் இந்தியா சிறப்பாக செயல்படுவதால், வெளிநாட்டு ஆவணப்பட தயாரிப்பாளர்கள் "ஏமாற்றம் அடைந்துள்ளனர்" என்றும் கூறினார்.

ஜி 20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்ட நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டது ஏன்?, இந்த ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு இந்த குறிப்பிட்ட நேரம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நாட்டில் இருக்கும் சில மக்கள் மீதும் எனக்கு வருத்தம் உள்ளது, அவர்களை நினைத்து கவலைப்படுகிறேன். நீதித்துறையின் தீர்ப்பைவிட ஆவணப்படத்தின் கருத்துகளை அவர்கள் நம்புகிறார்கள்" என்று ஆரிஃப் முகமது கான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT