கோப்புப் படம் 
இந்தியா

லக்னௌ-கொல்கத்தா விமானம் அவசர தரையிறக்கம்

கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் லக்னௌ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

DIN

கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் லக்னௌ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌ விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் மீது பறவை மோதி உள்ளது. 

இதையடுத்து அந்த விமானம் லக்னௌ விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள விமான நிர்வாகம் இந்நிகழ்விற்காக மன்னிப்பும் கோரியுள்ளது. ஏர் ஆசியா விமானத்தில் பறவை மோதிய நிகழ்வால் லக்னௌ விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT