ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் மற்றும் கிளஸ்டர் பல்கலைக்கழகங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாகவே தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் பனி நிலவுவதால் வட மாநிலங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் கடந்த ஆண்டில் மட்டும் ரயிலில் அடிபட்டு 274 போ் பலி
மூடுபனி காரணமாக ரயில், விமான சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டு தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் மற்றும் கிளஸ்டர் பல்கலைக்கழகங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் பின்னர் வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என காஷ்மீர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தாமதமாக செல்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.