இந்தியா

மதமாற்ற திருமணங்களைக் கட்டுப்படுத்தும் மாநிலச் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள்: பிப்.3-இல் உச்ச நீதிமன்றம் விசாரணை

DIN

பல்வேறு மாநிலங்களில் மதம் மாறி திருமணம் செய்து கொள்வதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிரான மனுக்களை பிப்.3-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மதம் மாறி திருமணம் செய்து கொள்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் உத்தர பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொள்வதற்கு மட்டுமின்றி, அனைத்து மதமாற்றங்களுக்கும் பின்பற்ற வேண்டிய விரிவான நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாடின் ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ என்ற தன்னாா்வ அமைப்பும் மனுதாரா்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வின் கவனத்துக்கு திங்கள்கிழமை வந்தது.

அப்போது ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங் வாதிடுகையில், ‘பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மதமாற்ற தடை சட்டங்களால் தற்போதைய சூழல் மிக மோசமாக உள்ளது. திருமணங்கள் நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது’ என்று தெரிவித்தாா்.

இந்த மனுக்களை பிப்.3-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT