ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (கோப்புப்படம்) 
இந்தியா

ஆந்திரத்தின் புதிய தலைநகரமாகிறது விசாகப்பட்டினம்!

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரை முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

DIN

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரை முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமையும் என முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரகக் கூட்டமைப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.

இனி வரும் நாள்களில் நமது தலைநகராக மாறும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்கிறேன் எனவும், மார்ச் 3 மற்றும் 4 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள்  மாநாட்டை அங்கு நடத்தப்போவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும், வரும் மாதங்களில் விசாகப்பட்டினம் புதிய தலைநகராக மாறப்போவதாக  ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

கடந்த 2014 ஜூன் மாதம் ஆந்திரம், தெலங்கானா மாநிலப் பிரிவினைக்குப் பின்னர், ஆந்திர முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆந்திரத்தின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT