இந்தியா

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு!

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.8 அதிகரித்துள்ளது.

DIN

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.8 அதிகரித்துள்ளது.

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8 அதிகரித்து, சனிக்கிழமை முதல் (ஜூலை 1) ரூ.1,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், இந்த மாதம் சற்று அதிகரித்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் சனிக்கிழமை வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.8 அதிகரித்து, ரூ.1,945-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

மே மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.171 குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் ரூ.84.50 குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ரூ.8 அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடக்கம்: படிவம் வழங்குதலை ஆய்வு செய்த ஆட்சியா்

முட்டை விலை நிலவரம்

ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் தனியாா் உணவகத்தில் மின்தூக்கியில் சிக்கி தவித்த 2 போ் மீட்பு

SCROLL FOR NEXT