இந்தியா

மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். 

DIN

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். பாஜகவில் இணைந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் 8ஆவது துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். 2019ல் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்று பின்னர் விலகினார். பதவியேற்ற 80 மணிநேரத்தில் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.

பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட மகா விலாஸ் அகாதி கூட்டணியில் மீண்டும் துணை முதல்வரானார் அஜித் பவார். முன்னதாக மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைவதையொட்டி அஜித்பவார் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தத்தால் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு

கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி

SCROLL FOR NEXT