நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலசா பகுதியை சேர்ந்தவர் சைதன்யா(23). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமான சைதன்யா, நெல்லூரில் உள்ள நாராயணா மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்துள்ளார்.
இன்று காலை கல்லூரி விடுதி அறையில் சைதன்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சைதன்யாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.