இந்தியா

மணிப்பூர் வன்முறை: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் மாநிலத்தில் தற்போதைய நிலவரம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் மாநிலத்தில் தற்போதைய நிலவரம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா், குகி பழங்குடியினா் இடையே கடந்த இரு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.  

மணிப்பூரில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த பாஜக அரசும் பிரதமர் மோடியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.  

சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது.

அதில் மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதாகவும் நிலைமையை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினருடன் மணிப்பூர் ரைபிள் படையினர், சிஏபிஎஃப், 114 ராணுவ வீரர்கள் மற்றும் கமாண்டோக்கள் உள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். 

இதையடுத்து மணிப்பூரில் தற்போதைய நிலவரம் குறித்து புதிய அறிக்கை ஒன்றை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு ஜூலை 10 ஆம் தேதித்திக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT