கோப்புப் படம் 
இந்தியா

அமைச்சரவை மாற்றம்? ஜெ.பி. நட்டாவுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்துள்ளார். 

DIN

தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்துள்ளார். 

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜெ.பி. நட்டாவுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோரும் சந்தித்தனர். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், அடுத்தடுத்து வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பல்வேறு யுத்திகளை பாஜக வகுத்து வருகின்றது.

இதனிடையே தெலங்கானா மாநிலத்தின் பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை பாஜக தலைமை நியமித்தது. இதேபோன்று, ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஷ்வரி, ஜார்கண்ட் பாஜக மாநில தலைவராக பாபுலால் மராண்டி, பஞ்சாப் பாஜக மாநில தலைவராக சுனில் ஜாகர் ஆகியோரை நியமித்தது.

மத்திய அமைச்சரை பாஜக மாநில தலைவராக நியமித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

நாளைய மின்தடை

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT