இந்தியா

அமர்நாத்: நான்கு நாள்களில் 50 ஆயிரம் பேர் தரிசனம்!

அமர்நாத் யாத்திரையின் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் சுமார் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் தெரிவித்துள்ளது. 

DIN

அமர்நாத் யாத்திரையின் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் சுமார் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடர்ந்து மக்கள் தரிசனத்திற்கு கோயில் நடை திறந்துவைக்கப்படுகிறது. 

அமர்நாத் யாத்திரையின் 3வது நாளில் 17 ஆயிரம் பேரும், நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை 13 ஆயிரம் பேரும் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை அமர்நாத் குகைக் கோயில் தொடங்கியலிருந்து இதுவரை மொத்தம் 50 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். 

இந்நிலையில், 4,680 ஆண்கள், 1,203 பெண்கள், 31 குழந்தைகள், 154 சாதுக்கள் மற்றும் 39 சாத்விஸ் உள்பட 6,107 பயணிகள் நிறைந்த மற்றொரு குழு இன்று காலை பள்ளத்தாக்கிலிருந்து 244 வாகனங்களில் பகவதி நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். 

62 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் பயணிகளின் வசதிக்காக பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT