பல நகரங்களில் பெட்ரோல் விலையை விட அதிகரித்த தக்காளி விலை!
இந்திய சந்தையில் தக்காளி விலை உயர்ந்து, கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டிய நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தாண்டி விற்பனையாகி வருகிறது.
இந்திய சந்தையில் தக்காளி விலை உயர்ந்து, கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டிய நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தாண்டி விற்பனையாகி வருகிறது.
மும்பை மற்றும் தில்லியில் பெட்ரோல் விலைகளுடன் ஒப்பிடும்போது - லிட்டருக்கு ஒன்றுக்கு ரூ.106.31 மற்றும் ரூ.96.72 விற்பனையாகி வருகிறது. பெருநகரங்களில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.140-க்கு விற்பனையாகி வருகிறது.
இந்திய சந்தையில், சமீபத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் மழையால், தக்காளி விளையும் மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், தக்காளி விலை உயர்ந்தது.
தக்காளியை விட பெட்ரோல் மலிவாக இருக்கும் நகரங்களின் பட்டியல் இங்கே வழங்கியுள்ளோம்:
1) தில்லி : தக்காளி ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.96.72 காசுகள்.
2) மும்பை : தக்காளி ஒரு கிலோ ரூ.110 | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ .106.31 காசுகள்.
3) பெங்களூரு : தக்காளி ஒரு கிலோ ரூ.100 | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.101.94 காசுகள்.
4) கொல்கத்தா : தக்காளி ஒரு கிலோ ரூ.148 | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.106.03 காசுகள்.
5) சென்னை: தக்காளி ஒரு கிலோ ரூ.117 முதல் ரூ.120 வரை | பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63 காசுகள்.
6) சிலிகுரி: தக்காளி ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை | பெட்ரோல் ஒரு லிட்டர்- ரூ.106.03 காசுகள்.
7) மொராதாபாத்: தக்காளி ஒரு கிலோ ரூ.150 | பெட்ரோல் ஒரு லிட்டர் - ரூ.96.83 காசுகள்.