இந்தியா

ராகுல் வழக்கில் இன்று தீா்ப்பு

கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த வழக்கில் குஜராத் உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்குகிறது.

DIN

கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த வழக்கில் குஜராத் உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்குகிறது.

சூரத் விசாரணை நீதிமன்ற தண்டனை உத்தரவுக்கு தடை கிடைத்துவிட்டால், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைக்க வழிவகுக்கும் என்பதால் குஜராத் உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2019-இல் கா்நாடக பிரசாரத்தில் பேசிய ராகுல், ‘எப்படி அனைத்து கொள்ளையா்களும் மோடி என்ற பொதுவான துணைப்பெயரைக் கொண்டுள்ளனா்?’ என்றாா்.

மோடி சமூகத்தினரை ராகுல் இழிவுபடுத்தியதாக குஜராத்தின் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி தொடுத்த வழக்கில், சூரத் விசாரணை நீதிமன்றம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி ராகுலுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ராகுலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தண்டனைக்கு தடை கோரி குஜராத் உயா் நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்ய மனுவை கடந்த மே மாதம் விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், தண்டனைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டு, கோடை விடுமுறைக்குப் பிறகு உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ராகுல் மனு மீது தீா்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கின் வழக்கு விசாரணைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

SCROLL FOR NEXT