உணவுகளில் தக்காளி சேர்ப்பது நிறுத்தம்: மெக்டொனால்டு நிறுவனம் அறிவிப்பு
தக்காளி விலை உயர்வு காரணமாக தங்கள் உணவுப் பொருள்களில் தக்காளி சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பிரபல மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தக்காளி விலை உயர்வு காரணமாக தங்கள் உணவுப் பொருள்களில் தக்காளி சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பிரபல மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி பயிரிடும் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. முன்னதாக அதிக வெப்பம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தக்காளி உற்பத்தி குறைந்தது.
Advertisement
இந்நிலையில், தக்காளி விலை உயர்வு காரணமாக தங்கள் தயாரிப்பு உணவுப் பொருள்களில் இப்போதைக்கு தக்காளி சேர்க்கப்படமாட்டாது என்று பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு தெரிவித்துள்ளது. அதாவது தக்காளி கிடைப்பது சிரமமாக இருப்பதால் தற்காலிகமாக தங்கள் உணவுத் தயாரிப்புகளில் தக்காளி சேர்ப்பது நிறுத்தி வைக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து தில்லி கிளை நிறுவன அதிகாரி ஆதித்யா ஷா, 'தற்போதைய சூழ்நிலையில் தக்காளி கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே இப்போதைக்கு தக்காளி சேர்க்காமல் உணவுகளை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி கொள்முதலுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் தரமான உணவுப்பொருள்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.